“காவல் தெய்வத்தைப் போற்று”

(பாவகை: கலிவெண்பா)
இளமையிலே தேசத்தின் எல்லையிலே நின்று
தளபதியாய் வெற்றிகளைத் தப்பாமல் கொள்கின்றார்
மார்கழி மாதத்தின் மார்பிளக்கும் வெண்பனியில்
போர்முனையில் நின்றபடி பூமிதனைக் காக்கின்றார்
சங்கரனார் மாமலையில் சக்திக் குளிர்மழையில்
எங்களது வீரர்கள் இன்பமுடன் காக்கின்றார்
கல்யாணம் ஆனவுடன் காவலுக்குச் சென்றவர்கள்
பொல்லாத தீவிரத்தால் பூமியிலே வீழ்ந்தாலும்
வல்லோனாய் வீரமிகு மண்புகழாய் வாழ்கின்றார்
சில்லென்ற பூங்காற்றாய் சீக்கிரமே வந்திந்த
பூஞ்சோலைப் பாரதத்தில் பூவாசம் கொள்கின்றார்
மாலோடு மாதேவன் வாழ்த்துகிற பேர்களென
நூலோர்கள் மேலோர்கள் நுண்ணுணர்வு கொண்டாட
கைகூப்பி நல்வணக்கம் காலமெலாம் சொல்லிடுவோம்
வையகத்தின் தெய்வம் அவர்.
(16.12.2021 19.13 pm)
