துணிவு கொள்வாய் தொடர்ந்து செல்வாய்../வே.கல்யாணகுமார்

.

காட்டாறு திரும்பித்தான்
பார்ககிறதா..
கடலலைகள் அடங்கித்தான் கிடக்கிறதா..
கேட்டுப்பார்.. இடிமின்னல் முழக்கிவர மறுக்கிறதா..
கூட்டுக்குள் அடங்கிவிட நீயென்ன கோழிக்குஞ்சா..!

ஆர்பரித்து எழுகின்ற மனிதனென்றால் அச்சமின்றி
துணிவுகொண்டு வாழவேண்டும்! யார்யெதிர்த்து
வந்தாலும் துணிவுகொண்டு தொடர்ந்துநடை
போட்டுயிங்கு நிமிரவேண்டும்.!

வஞ்சனைகள் வலைவிரிக்கும்.. வாழ்ந்தாலும்
தாழ்ந்தாலும் உலகம் ஏசும்.! நெஞ்சகத்தில் வீரத்துடன்
நிமிர்ந்து நீ நடந்தால்தான்.. விஞ்சிவரும் வெற்றியுனை..
சுழ்ந்துவரும்..
வென்றெடுக்க தொடர்ந்து கால்கள் முன்னடக்கும்.!

வெஞ்சமரும் விளையாடும் ஆடுகளம் ஆகிவிடும்..
விடுதலைக்கு போராட துணிந்தவர்க்கே தடை விலகும்..
செங்கொடிகள் ஏந்திவந்து பொதுவுடமை பொழுதும் வரும்..
எங்குமனம் துணிகிறதோ.. அங்கு நிலம்
உயிர்த்துயெழும்!