
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கலைஞன் திரைப்பட மேதை ஆந்த்ரே தார்க்கோவெஸ்க்கி கலை தர்க்கரீதியாக செயல்படாமல் கலை நம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்கிறார். மேலும், ஒரு கலைஞன் என்பவன் எழுத்தாளன், இசையமைப்பாளன், ஓவியன், திரைப்பட இயக்குநர் என பல ரூபத்தில் இருந்தாலும், ஒரு கலைஞன் என்பவன் குழந்தை மனோபாவம் கொண்ட கவிஞனாகவே இருக்கவேண்டும் . ஏனெனில் அவன் வெளிப்படுத்துகிற உலகம் நம்மை ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கை கொள்ள வைக்கவும், மறுக்கவும் என நமக்கான சுதந்திரங்களையும், சாத்தியங்களையும் வழங்குகிறது. ஒரு கலைப் படைப்பு ஆன்மிக ரீதியாக நம் ஆன்மாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியம் என்கிறார்.
Medieval Period உலகளவில் சுவாரஸ்யமான காலக்கட்டம். இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஆட்சி. ஐரோப்பாவில் கிறிஸ்துவ மதத்தின் எழுச்சி. இறுக்கமான மத சட்டங்கள் இருந்தாலும் பரோக் (Baroque) போன்ற கலை வெளிப்பாடுகள் அபாரமாக மேலெழுந்தன. உம்மர்ட்டோ ஈகோ வுக்கு இந்த காலக்கட்டம் வசீகரமாக இருந்ததால் Name of the Rose நாவலை எழுதினார். தார்க்கோவெஸ்க்கி இன் Andrei Rublev என்ற மகத்தான திரைப்படம் முதலில் புரியாது. பலமுறை பார்த்தாலும் அதன் மகத்துவம் புரியாது. Medieval Period ல் நகரும் தத்துவ சிக்கலான திரைப்படம். உரையாசியர்களோடு வாசித்தால் தார்க்கோவெஸ்கியின் மேதை புரியும்.
நண்பர் / திரைப்பட ஆய்வாளர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி தார்க்கோவெஸ்கியின் ஓவியம், இசை, இலக்கியம், இறையியல் மீதான ஈடுபாட்டையும், மற்றும் அவர் வெளிப்படுத்திய கலைப் படைப்பு எப்படி ஆன்மாவை அசைக்கிறது என எழுதியுள்ளதை அவருடைய கட்டுரை தொகுப்பு ” சுவடுகள்” ல் வாசிக்கலாம் (பிரக்ஞை வெளியீடு)..
பல நூல்கள் தமிழாக்கத்தில் வருகிறது. (பெரும்பாலும் கவிதை / கதை)…நல்லது…இந்த நூல் (Sculpting in Time) அவசியம் தமிழுக்கு வரவேண்டியது…
இன்று தார்க்கோவெஸ்கியின் நினைவு தினம் என்பதால் இதை எழுதுகிறேன்… Salute to my Master Genius!
