காலையில் அண்ணாநகருக்கு/வாசுதேவன்

காலையில் அண்ணா நகருக்கு சென்ற என் மகள் மதியம் கிளம்பியபோது மழையில் சிக்கி விட்டாள். மதியம் ஆட்டோ / கார் என எதுவும் கிடைக்கவில்லை. பேருந்துகள் ரத்து ஆகிவிட்டன. என்னாலும் போகமுடியவில்லை. போக்குவரத்து சிக்கலால் நிச்சயமின்மை. சில மணிநேரங்கள் பொறுமையாக காத்திருந்தாள். ஓலா / உபேர் தவிர எதிலும் பயணம் செய்ய வேண்டாம் என் அறிவுறுத்தினேன். காலேஜ் ரோடு வரைக்கும் ஒரு நம்பகமான ஆட்டோவில் பயணித்து சாகசமாக வந்து சேர்ந்துவிட்டாள். அதற்குப்பிறகும் சில மணிநேரங்கள் தனியாக பேருந்து நிலையத்தில் அவள் காத்திருந்தாள்.. எனக்கு ரத்தம் அழுத்தம் அதிகமாகிவிட்டது…ஏதேதோ துர் சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.. இப்போது அரசு பேருந்தில் பத்திரமாக உட்கார்ந்துவிட்டேன்..இன்னும் ஒரு மணிநேரத்தில் பெசண்ட் நகர் வந்துவிடுவேன் என்றாள்..படிப்பினைகள் (1) இயற்கையை மதிக்க வேண்டும். அதை உதாசீதனப்படுத்தினால் இப்படி தாறுமாறாக தன் கோபத்தை வெளிப்படுத்தும்.(2) தவறாமல் கையடக்க குடை இருக்க வேண்டும். (3) சென்னையில் மழை பெய்தால் நீச்சல் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். (4) விடியல் அரசாங்கம் குறைந்த பட்சம் சென்னை வாழ் மக்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி வகுப்பு அளிக்க வேண்டும்.