வானிசை/எஸ் வி வேணுகோபாலன்


ஓசை கேட்கிறது
முதலில்…

ஸ ப ஸ…..
மழையின் இசை
பின்னர் சுரம் பிடிக்கிறது

பாடகரைச் சுற்றிலும்
அதற்குள்
பளீர் பளீர் என
புகைப்படங்கள் எடுத்துத் தள்ளும்
காமிரா வெளிச்சங்கள்

செருமிக் கொள்கிறார்
பாகவதர்
கொஞ்சம் உரக்க,
சில போது
கேட்போர் நடுங்க

பெரிய வித்வான் பாருங்கள்,
சபை
வாய் திறவாது
கேட்டுக் கொண்டிருக்கிறது

இப்போது
சீராகப் போய்க் கொண்டிருக்கிறது
கச்சேரி

யாரோ சோடாவோடு
பக்குவமாக
அவரருகே போய்
நின்றிருக்க வேண்டும்

கொஞ்சம் போல
நிறுத்தினார்…

ஆனால்,
சோடா குடித்த தெம்போ
‘என்னடா இது சோடா?’
என்று அவர் கொதித்துப் போன வம்போ

பொழிந்து தள்ள
ஆரம்பித்து விட்டார் பாகவதர்

ரசிகர்கள்
ரசிகர் அல்லாதவர்கள்
எல்லோரும் ஒரு சேர
இப்போது
இசை வெள்ளத்தில்….

5 Comments on “வானிசை/எஸ் வி வேணுகோபாலன்”

  1. வருண பகவான் ஓசை ஒரு பக்கம் மற்றொரு பக்கம் வேணு வின் கவிதை வாழ்த்துக்கள்

  2. சிலநேரங்களில் ஒன்ஸ் மோர் கேட்பது உண்டு.‌ இசை மழையில் நனைந்து…
    ஆனால் இப்போதெல்லாம் நோ மோர். அடைமழை மால் அவதி. உச்ச ஸ்தியில் சென்றாலும்‌ ஆரோகணம் (ஏற்றம்) முடிந்தால் அவரோகணம் (இறக்கம்) ஆரோக்கியமானது

  3. மழையும் உங்கள் இசை ரசனையும் இணைந்ததில் ‘மார்கழி மழை’ கவிதை விருந்தாக எங்களுக்கு அமைந்தது.

Comments are closed.