ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 40/அழகியசிங்கர்

30.12.2021 – வியாழன்

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  அம்பைக்கு இந்த ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்துள்ளது.
அழகியசிங்கர் : அம்பையை வாழ்த்துகிறேன். 
ஜெகன் :  எனக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் எழுத்தாளருக்குக் கிடைத்துள்ளது என்று பெருமையாக இருக்கிறது.
மோகினி :   பெண் எழுத்தாளர் ஆண் எழுத்தாளர் என்றெல்லாம் அம்பைப் பார்க்க மாட்டார் என்று நினைக்கிறேன். 
அழகியசிங்கர் : உண்மைதான். 
மோகினி :  ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு என்ற சிறுகதைத் தொகுப்பில் அம்பை எழுதியதை இங்குக் கொடுக்கிறேன்.

'எழுதி முடித்துவிட்ட நிறைவு நிலையை எட்டி வாழ்க்கையின் இழுபறிகளைக் கடக்கும்போது கதைகள் இல்லாமல் போகின்றன. அந்தச் சமையல்காரப் பெண்மணியின் நிலைமையில் என்னை இருத்திக்கொண்டால். என் முறுக்குகள் அழகான வட்டங்களாக இல்லை ; சில முறிந்து போயிருக்கின்றன; சில அதிகம் வெந்து சிவந்துவிட்டன; சில வேகவில்லை; மாவு சரியாகக் கூடாததால் சில விண்டு போயிருக் கின்றன. மீண்டும் மீண்டும் நான் படைப்பில் இறங்க இந்தத் திருப்தியின்மையும் கதை என்னும் வியப்பூட்டும் நேர்வுக்குக் காக எப்போதும் என் மனத்தில் ஒரு கதவு திறந்திருப்பதும் காரணங்களாக இருக்கலாம்.’

அழகியசிங்கர் : தகுதியான எழுத்தாளருக்குத்தான் பரிசு கிடைத்துள்ளது.
ஜெகன் :  யாரும் சாகித்திய அக்காதெமியை கிண்டல் செய்ய மாட்டார்கள்.
அழகியசிங்கர்:  ஆமாம். 


                                              எழுதியது இரவு 11.02'

One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 40/அழகியசிங்கர்”

Comments are closed.