
ஒற்றை நாள் என்ன
ஒன்பது நாட்கள் என்ன
அறுபதென்ன
இருபதென்ன
தனித்திருக்கையில்
விடாது
உணர்த்திக் கொண்டிருக்கும்
நினைவுகளில்
பிணைத்திருக்கிறது
இருவரையும் காதல்
வெள்ளம் வடியக்
காத்திருக்குமா உள்ளம்
இந்தப் பெருமழை நாளிலும்
பொறுப்பற்ற வேகத்தில்
வாசலில் கடக்கும் வாகனம் ஒன்று
அடித்துத் தள்ளும் நீர்
வீட்டை நோக்கி வந்து
கடலலை போலும்
இறைத்துத் தெறிக்கையில்
மீண்டும் ஆழ்கிறது மனம்
இன்னும் மட்டற்ற காதலில் !

வெள்ளம் வடிய வாழ்த்துக்கள்