
திட்டங்களும்,
முடிவெடுத்தல்களும்,
தீர்மானங்களுமாக…
ஒவ்வொரு புதுவருடத்தில்
வீடுநிறைக்கும் இலவச விளம்பர நாட்காட்டிகளாய்
சேர்த்துக்கொள்கின்றோம்…
சில நிறைவேறியும்
சில நிராசையாகவும்
சில கிடப்பிலும்
வெவ்வேறுதிசையில்
பின்னங்களாய்…
நகர்த்திக்
கொண்டுத்தான்
இருக்கின்றன
நகரும் வருடங்கள்..
நாமும்
காலச்சக்கரம்
கட்டிய கால்களாய் நகர்ந்துகொண்டே
இருக்கின்றோம்
வரும் ஒரு
பொன்நாளுக்காக…
எதிர்பார்ப்பில் ஓடும்
ஓடம்
கரைசேரும் நாள் வரும் நம்பிக்கையில்
அடியெடுத்து வைப்போம் புதுவருடத்தில்…
வருடங்கள் ஓட,
வாலிபங்கள் கரைய,
பக்குவம் பரிமளிக்க..
நல்லெண்ணத்தை வளர்த்தெடுப்போம்
நற்செயலை நாளும்
விதைப்போம்.
நலம் வந்து சூழ
வளம் பெற்று வாழ
வாழ்த்தி வரவேற்போம்
புத்தாண்டை.

