
2021 ஆம் ஆண்டு
மழை வெள்ளத்துடன்
மண்ணில் விடை பெற
புத்தாண்டு குழந்தை
நித்திரை நீங்கி
முத்திரை பதிக்க
2022 ஆம் ஆண்டு
புத்தாண்டாக தவழ்ந்து
புன்னகையுடன் வருகிறது!
பொங்கும் புதுவெள்ளமாக
மகிழ்வுடன் தவழ்ந்து வர
வெள்ளிக்கிழமை நள்ளிரவில்
பூக்கும் புதுமலராக
புத்தாண்டு மலர்கிறது!
வானில் தவழ்ந்து வரும்
வெண்ணிலா ஆசையோடு
விண்மீன் கூட்டங்களோடு
புத்தாண்டு குழந்தையை
குளுமையுடன் வரவேற்கிறான்!
உருகி ஒளி பரப்பி நிற்கும்
வண்ண வண்ண மெழுகுவர்த்திகள்
இசைபாடும் கருவிகள்
மாதாகோவில் மணியோசை மகிழ்வுடன் புத்தாண்டு
புதுமலரை வரவேற்கும்போது …
தவழ்ந்து வரும்
புத்தாண்டு குழந்தையை
தாய் உள்ளத்துடன்
அன்புடன் வரவேற்று
அணைத்து மகிழ்வோம்!
- 🦚
