புத்தாண்டே வருக..!/வே.கல்யாணகுமார்

இல்லாமை கல்லாமை
இல்லாத ஆண்டாக..
கொல்லாமை எல்லோரும்
எதிர்நோக்கும் ஆண்டாக..
பொல்லாத நோயெல்லாம் புதைந்திட்ட ஆண்டாக..
நல்லாட்சி நடக்கின்ற புத்தாண்டே வருக.!

செல்லாத நோட்டாக சென்றிட்ட ஆண்டுக்குப்பின்..
வல்லோனின் அருளாக வந்திட்டாய் புத்தாண்டே.!
எல்லோரும் எல்லாமும் இந்நாட்டில் எய்துவிட…
துள்ளாத மனம்துள்ள துவங்குகிறாய் புத்தாண்டே.!

கடல்தாண்டி.. மலைதாண்டி.. வாலாட்டும் பகையொழிய…
திடம்கொண்ட தோள்கொண்டு.. பகைவென்று வளம்சேர..
இடம்தந்து பலம்தந்து நலம்தந்த நாள்வருக.!