புது வருடம் 2022 வரவேற்பு/சுரேஷ் ராஜகோபால்

முன்னுரையும் முடிவுரையும்
இல்லாத கால ஓட்டத்தில்
வருடா வருடம் முதல்நாள்
களைக்கட்டும் திருவிழா.

சங்கல்பம் செய்வோம்
பலவற்றைச் சாதிப்பதாய்
நாள் செல்லும் வேகத்தில்
நமது கவனம் சிதறிவிடும்.

விட்ட இடத்தில் நின்றிருப்போம்
தொட்டதை பிடித்திடுவோம்
நின்ற இடத்தில் நிலைத்திருப்போம்
காலம் மட்டும் கடந்திடும்

மறுபடி புது வருடம் வந்துவிடும்
உடனடி பழைய சபதங்கள்
தீர்மானமாகுமே உத்வேகமாகச்
செயல் படுத்தும் திண்ணத்துடன்

நாளை விழிப்பது
புது வருடத்தில்
நாடு செழிக்கட்டும்
நாமும் செழிப்போம்

நலன்களை வாரிக்குவிக்கட்டும்
பலன்கள் கைமேல் கிடைக்கட்டும்
தியாகங்கள் சில செய்தே
நல்லதை நோக்குவோம்.

One Comment on “புது வருடம் 2022 வரவேற்பு/சுரேஷ் ராஜகோபால்”

Comments are closed.