
புத்தாண்டே
உன்னை வரவேற்கிறேன்
இடர்பாட்டில் சிக்கியுள்ள
நாங்களெல்லாம்
கண்ணை மூடி
உன்னை வரவேற்கிறோம்
இந்த
ஆண்டாவது
உலகம் முழுவதும்
ஆட்டிப்படைக்கும்
தொற்று எங்களை
அண்டவிடாமல் ஓட ஓட விரட்டத்
தாழ்ப் பணிந்து வேண்டுகிறேன்
புத்தாண்டே புனிதமான
புத்தாண்டே இனிமையான
புத்தாண்டே
நான்
சொல்வதைக் கொஞ்சம்
காதுகொடுத்துக் கேள்
உன்னை நம்பி
நான் அச்சடித்துக்
கொண்டுவந்த கவிதைப்
புத்தகமெல்லாம்
ஒன்று விடாமல்
விற்றுத் தீர்க்க
அருள்பாலிக்க வேண்டுகிறேன்
என் புத்தகம்
வாங்குபவருக்கு
எல்லாவித சுபிட்சமும்
உண்டாகப் புத்தாண்டே
நீ அருள் புரிய வேண்டும்
