
பூக்கள் பூக்க கனிகள் தோன்ற
சருகுகளை உதிர்க்கும்
காலமரத்தின் உருவத்தை
கண்டவர் விண்டிலர்.
🦀
பலியாட்டின் கண்ணில்
புத்தனும் ஏசுவும் வெளிப்பட்டாலும்
விருந்தின் காட்சிகள்
ஏனோ தோன்றமலில்லை.
🦀
எரியும் வீட்டில்
எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி
என்பதை ஆராயும் அவன்
எரியும் கொள்ளியாவான்.
🦀
மனம் எனும் பறவை
தினங்களைக் கடக்க
கனவுகளை விரிக்கிறது
காலங்களைத் தாண்டி.
🦀
அன்பை விதைத்தவன்
அன்பை அறுவடை செய்கிறான்
அன்பு அன்பை விளைவிக்கும்
அன்பில் செழித்த நிலம்.
🦀
பெருந்தாகக் கடலில் தத்தளிக்கிறேன்
பசித்த பறவைகள் வலம் வருகின்றன
பேரன்பின் சுகமானகாற்று
மெல்ல வருடுகிறது.
🦀
தீராத் துயரத்தின் குரல்களை
இடியின் இதயத்தில் நிரப்புகிறேன்
கொட்டித் தீர்க்கிறது
பசி கொண்ட பெரு மழை.
🦀
இருண்ட காடு
மருண்டு நிற்கும் பெண் மயில்
புரண்டோடி வருகிறது
பிளிரி வரும் சூறாவளி.
🦀
