உயர்வான பதில்கள்-நேபாள நாட்டுப்புறக் கதை/-தமிழில்அதங்கோடு அனிஷ்குமார்

புபேந்திரப் பிரசாத் ஒரு பெருந்தொகையை செலவு செய்து தனது ஒரே மகனின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தி வைத்தார்.

திருமணத்திற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து தனது மருமகளின் புத்திசாலித்தனத்தை கண்டறிய ஆசைப்பட்ட புபேந்திரா,
“நான் உன் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்தேன் என உன்னால் யூகிக்க முடியுமா?”எனக் கேட்டார்.
“ஒரு மூட்டை அரிசியின் விலை அளவு இருக்கும்”என்றாள் அந்தப் பெண்.

அதிர்ச்சியில் வாய் பிளந்தபடி நின்றார் மாமனார்.

“ஒரு மூட்டை அரிசியின் விலையளவு!?”எனக் கோபப்பட்ட புபேந்திரா,”முட்டாள் பெண்ணே!ஒரு பெரும் தொகையை உன் திருமணத்திற்கு செலவு செய்தேன்”என்றார்.

அந்தப் பெண் ஏதும் கூறவில்லை.
“அவள் ஒரு முட்டாள்!,ஆனால் என் மகன் அப்பாவி என நினைத்தார் புபேந்திரா.
சிலவாரங்கள் கழித்து ஒரு உறவினரின் திருமணத்திற்குப் போகும் வழியில் ஒரு பிண ஊர்வலத்தை அவர்கள் பார்க்க. நேர்த்தது.
“இறந்தது யார்?” என துக்கத்துடன் பின் தொடர்ந்த ஒருவரிடம் கேட்டார் புபேந்திரா.
வெறும் “ஒரு பிணம் தானா?இல்லை நூறு பிணங்களா?”எனக் கேட்டாள் அவர் மருமகள்.
மருமகளின் கேள்வியால் மிகவும் அதிர்ச்சியடைந்த புபேந்திரா துக்கத்துடன் பிணத்தை பின் தொடர்ந்தவரின் பதிலுக்கு காத்திராமல் விறுவிறுவென நடந்தார்.

இப்போது அவர்கள் வேலையாட்கள் அறுவடை செய்து கொண்டிருக்கும் வயலை அடைந்தார்கள்.
“நல்ல அறுவடை போல தோன்றுகிறது”என்று கூறினார் புபேந்திரா.
“இந்த வருசத்திற்கான அறுவடையா இல்ல போன வருசத்திற்கான அறுவடையா
எனக் கேட்டாள் அவர் மருமகள்.
“உன் மனைவிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு.பைத்தியம் எதை எதையோ முட்டாள்தனமா பேசுது”என தன் மகனிடம் புபேந்திரா கூறினார்.

“அவளுக்கு பைத்தியமா?” உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதே!
அவள் கேட்ட முட்டாள் தனமான கேள்விகளை நீ கேட்கவில்லையா?”
என தன் மகனிடம் கோபப்பட்டார்.

“அவளுடைய கேள்விகள் முட்டாள் தனமா தோன்றலாம்.ஆனால் முட்டாள் தனமானவை அல்ல”எனக் கூறிய அவரது மகன், “அவளுடைய கேள்விகளை அவளையே விளக்கச் சொல்லலாமே?”என்றான்.

புபேந்திரா எதுவும் பேசவில்லை.ஆனால் தன் மருமகள் தனியாக இருக்கும் போது
தன் மகன் கூறியபடி விளக்கம் கேட்க தீர்மானித்திருந்தார்.

“இப்ப சொல்லு.அன்றைக்கு அந்த பிண ஊர்வலத்தில் அவங்க தூக்கிட்டுப்
போறது ஒரு பிணமா?இல்ல நூறான்னு ஏன் கேட்டாய்?எனக் கேட்டார்.
சில மனிதர்களுக்குப் பின்னால் நிறைய பேர் இருப்பாங்க.அப்படிப்பட்ட மனிதர்களில்
ஒருத்தர் இறக்கும் போது நிறைய பேர் அதிர்ச்சியடைவார்கள்.அவர்களில் சிலர் இறந்தும் போவார்கள்.

அதனால் தான் அவர்கள் தூக்கிட்டுப் போறது ஒரு பிணமா?இல்லை ஒரு நூறா”என்று கேட்டேன்.

என அந்தப் பெண் விளக்கமளித்தார்.

“அறுவடை செய்து கொண்டிருந்த வேலையாட்களைப் பார்த்து அவர்கள் இந்த
வருசத்துக்கான அறுவடை செய்கிறார்களா? இல்லை போன வருசத்துக்கானதா?
என நீ கேட்ட கேள்வியின் அர்த்தம் என்ன?”எனக் கேட்டார் புபேந்திரா

“இந்த வேலையாட்கள் அனைவரும் கடனில் தத்தளிப்பவர்கள்.ஆதலால் அவர்கள் போன வருசத்திற்கான கடனை அடைப்பதற்காக வேலை செய்கிறார்களா?
இல்லை அந்த கடனை அடைத்து விட்டு புதியதாக வேலை செய்கிறார்களா”
என அறிந்து கொள்ளவே கேட்டேன் என்றாள்.

தன் மருமகள் தான் நினைத்தது போல முட்டாள் அல்ல தன்னை விட புத்திசாலி
என இப்போது உணர்ந்து கொண்ட புபேந்திரா, “

கடைசியாக ஒரே ஒரு கேள்வி.ஒரு பெரும் தொகையை செலவிட்டு உன் திருமணத்தை நான் நடத்தி வைத்ததை அறிந்திருந்தும் ஒரு மூட்டை அரிசியின் விலையளவு தான் என ஏன் கூறினாய்?”எனக் கேட்டார் புபேந்திரா.

திருமணத்திற்கு நீங்கள் செய்த அத்தியாவசிய செலவுகள் சில நூறு ரூபாய்கள் தான்”எனப் புன்னகையுடன் கூறிய அப்பெண், “மீதி நீங்கள் செலவு செய்த தொகை முழுவதும் உங்கள் கௌரவத்தை நிலை நாட்டவும் அதிகப்படுத்தவும் தான்.வேறு விதமாகச் சொன்னால் அதிகத்தொகை நீங்க திருமணத்திற்காக செய்யவில்லை.
உங்களுக்காகத் தான் செய்தீர்கள்”என்றாள்.

One Comment on “உயர்வான பதில்கள்-நேபாள நாட்டுப்புறக் கதை/-தமிழில்அதங்கோடு அனிஷ்குமார்”

  1. மிக மிக அருமை சார். மிக எளிமையாய் ஆனால் ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்கும்விதமாய் உள்ளது.

    1 பிணத்திற்குப் பின்னால் 100 வாழும் பிணங்கள் – வாழ்க்கை நிதர்சனம் – நம் சித்தர்கள் பலர் கூறிச்சென்றது.

    இந்த வருட அறுவடையா சென்ற வருட அறுவடையா – விவசாயிகளின் இன்றைய நிலை

    திருமண செலவு 1 மூட்டை அரிசியின் விலை – ஆடம்பர வாழ்வில் மூழ்கிக் கொண்டிருக்கும்
    தற்கால மனித மனம் (இனம்

Comments are closed.