
தேன் கிடைக்கும்
என்ற நம்பிக்கைதான் பட்டாம்பூச்சிகளளப்
படபடக்க வைக்கின்றது..
இரை கிடைக்கும்
என்ற நம்பிக்கைதான்
பறவைகளை சிறகடிக்க
வைக்கின்றது..
மழைவரும்
என்ற நம்பிக்கையில்தான்
மயிலின்
நடன அரங்கேற்றம்..
நம்பிக்கைதான்
பலம்..அழகு..
முயற்சியின் தாய்..
மயானக்
கொள்ளையின் நடுவே
மருந்தாய்க் கனிந்தது
நம்பிக்கைதானே..
நம்புவோம் இனி
நல்லதே நடக்குமென்று..
காத்திருபப்போம்
காரிருளின் அடிவயிற்றைக்
கீறி வெளிவரப்போகும்
அக்கினிக் குஞ்சுக்காக..
