மனக் கருவூலத்திலிருந்து -பூரணி

க்ருஷாங்கினி

சாமியும் பூதமும

மனிதர்கள் பேசும்போது சில சமயங்களில் கேட்டதுண்டு, “சாமியாவது பூதமாவது! ஒன்றும் கிடையாது” என்று. இதிலிருந்து தெரிவது சாமி வேறு பூதம் வேறு என்பதுதான். சாமி என்பது தெய்வீகத்தையும், பூதம் என்பது பௌதீகத்தையும் குறிக்கிறது. பௌதீகம் தெய்வீகமாக முடியாது.

தெய்வம் என்னும் சொல் சத்தியத்தைக் குறிக்கும். சத்தியம், நிஜம், எல்லாம் ஒரே அர்த்தத்தில் உபயோகப்படுகிறது. அது ஒன்றாகத்தான் இருக்குமே யன்றி பலவாக இருக்க முடியாது. ஆகையால் தெய்வங்கள் பல என நினைப்பது தவறு.

சத்தியம் உணரப்படும் பொருளே தவிற அறியப்படும் பொருள் அன்று. உண்மையில் ‘நான்’ என்பது ஒரே வஸ்துதான். அது ‘நாம்’ என்னும் பன்மை அல்ல. ஆனால், ‘நான், நீ, அவன்’ என்று பலவாறாக இருக்கிறோமே அது எப்படி? என்று கேட்கலாம் அது இயற்கையின் செயலான பௌதீகத்தினால்தான்.

சூரியன் எப்படி உஷ்ணமும் ஒளியும் உடையதாக இருக்கிறதோ அதுபோல சத்தியத்திடமிருந்து அறிவும், ஆற்றலும் வெளிப்படுகிறது. இயற்கையானது அந்த அறிவையும் ஆற்றலையும் கைபற்றி, பஞ்ச பூதங்களான மண், நெருப்பு, நீர், காற்று, ஆகாயங்களை உண்டாக்கி, அவைகளின்மூலம் பௌதீக உலகையும் படைக்கிறது. அந்த பௌதீக உலகில் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளுக்கெல்லாம் ‘மனம்’ என்னும் நுண்ணிய அமைப்பையும் உண்டுபண்ணுகிறது. அந்த ஜீவராசி களின் பல மனங்களிலும் ஏகமான ‘நான்’ என்னும் சத்தியத்தின் பிரதிபலிப்பாக அறிவும் ஆற்றலும் பிரதிபலிக்கின்றன.

முகம் பார்க்கும் கண்ணாடியை சூரியன் முன் சாய்வாகக் காட்டினால் அதற்குள்ளிருந்து சூரிய ஒளியும் உஷ்ணமும் பிரதிபலிப்பதுபோல உயிர்களின் மனங்களின் அமைப்புக்கேற்ப சத்தியத்தின் அறிவும் ஆற்றலும் பிரதிபலிக்கின்றன. அவை பல ‘நான்’களாக உருவெடுக்கின்றன.

உடலும் உயிரும்

——————–

உயிரை ஜீவன் என்றும் ஜீவாத்மா என்றும் சொல்கிறார்கள், சத்தியமான பிரும்மத்தைப் ‘பரமன்’ என்றும் சொல்கிறார்கள். உடலோடு கூடிய உயிர் ஜீவாத்மா எனப்படுகிறது. உடலற்ற உயிரைக் காணவோ அறியவோ முடியாது. நாம் மனிதர்களைப் பற்றிச் சொல்லும்போது, ‘அவன் கருப்பு; இவள் குட்டை’ என்று குறிப்பிடுகிறோம். உண்மையில் கருப்பாகவோ குட்டையாகவோ இருப்பது உடலேயன்றி ஜீவனல்ல. நரை ,திரை, மூப்பு, சாவு முதலிய எல்லா விவகாரங் களும் உடலைப் பொருத்ததே; உயிருக்கு எவ்வித மாற்றமும் கிடையாது.

ஒரு வீட்டைக் கட்டிய ஒருவனிடம் ‘இது யார் வீடு?’ என்று கேட்கிறோம் என்பதாக வைத்துக்கொள். அவன் ‘இது என்வீடு’ என்று சொல்வானே தவிர ‘நான் வீடு’ என்று உரைக்க மாட்டான். அதுபோல நாமும் ‘இது என் உடம்பு’ என்று கூறுவோமேயன்றி ‘நான் உடம்பு’ என்று சொல்ல மாட்டோம். இப்படி சொல்லிக் கொண்டே போவோமானால் ‘என் உடம்பு, என் மனசு, என் அறிவு, என் உயிர்’ என்பதாக ‘நான்’ என்ற ஒரு பொருளுக்குச் சொந்தமாக்கப்படுகிறது. 

அந்த ‘நான்’ யார்?  

இதுதான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் உபதேச சாரமும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசமுமாகும். இந்த உடலை ‘நான்’ என்று மயங்குவதைத்தான் “தேகாத்ம புத்தி” என்று வேதாந்தத்தில் சொல்லப்படுகிறது (உடலை நான் என்று தவறாக நினப்பது). மின்சாரம் செயல்பட வேணுமென்றால் ‘பல்பு, டி.வி., பேன்,’ போன்ற பொருள்களும், அவற்றை இயக்கும் ஸ்விச்சும் தேவைப்படுகிறது. உடலும் உயிரும் இணைந்தாலன்றி ஒரு செயலும் நடைபெறாது.

இது பூச்சி முதல் பிரும்மா முடிய எல்லோருக்கும் பொது.

பக்தி

—–

மனித இனம் எல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்ட அறிவோடும் ஆற்றலோடும் இருக்கிறது. அதைக் கொண்டுதான் தன் வாழ்க்கையைப் பகுத்து வாழவேண்டியிருக்கிறது. சுத்தமான கண்ணாடியில் தெரிவதும் கட்டாந் தரையில் தெரிவதும் ஒரு பொருளின் பிரதிபலிப்பான நிழல்தான் என்றாலும் தரையில் விழும் நிழலில் நம் ஜாடை தெளிவற்று மொத்தையாக இருக்கிறது. ஆனால் உயர்ந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் (ஏறக்குறைய) தத்ரூபமாகத் தெரிகிறது. அதுகூட வலம் இடமாக மாற்றித்தான் தெரியும்.

மனித இனம் எல்லாமே ஒரே மாதிரி விகாசமாக இருப்பதில்லை. தெளிவு, சுமாரான தெளிவு, அறியாமை மிகுந்து குறைந்த அறிவு என்று சராசரியாக மூன்றுவிதம் காணப்படுகிறது. இதைத்தான் “சத்வ, ரஜோ, தமோ” குணங்கள் என்று வேதாந்திகள் சொல்லுகிறார்கள். அவரவர் குணங்களுக்குத் தக்கபடி உலகையும் மக்களையும் வாழ்க்கையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்கிறார்கள்.

பல சமயங்களில் மனிதன் தனக்கு மீறிய ஒரு சக்தி தன்னையும் உலகையும் ஆட்டி வைப்பதை உணருகிறான். அப்போது அவன் தன்னையும் அறியாமல் அதற்குத் தலை வணங்குகிறான், பயப்படுகிறான். தன் கைமீறிப் போகும் பல சம்பவங்களின்போது அந்த சக்தியிடம் யாசிக்கிறான். இதைத் தான் நாம் ‘பக்தி’ என்று சொல்லுகிறோம். இந்த ‘பக்தி’யை நம் முன்னோர் கள் இரண்டு விதமாகப் பிரித்திருக்கிறார்கள். 

அ) காம்ய பக்தி 

ஆ) நிஷ்காம்ய பக்தி.

 ‘காம்ய பக்தி’யில் நாம் நமது நலன்களுக்காக பக்தி செய்கிறோம் (நோய் தீர வேண்டும், செல்வச் செழிப்போடு இருக்கவேண்டும், பரிட்சையில் தேர்வடைய வேண்டும் என்பதுபோல). ‘நிஷ்காம்ய பக்தி’ செய்பவர்கள் ‘பக்தி’க்காகவே பக்தி செய்வார்கள். அவர்களுக்கு அச்செய்கையில் ஒரு இன்பம் கிடைக்கும். ஒரு குடிகாரன் எப்படிக் குடும்பம், குழந்தை என்பன போன்றவற்றைக்கூட விரும்பாமல் குடியில் ஆழ்கிறானோ அதுபோல உண்மையான் ‘நிஷ்காம்ய’ பக்தர்கள் பக்தியில் ஈடுபட்டு உலகையே துறக்கின்றனர்.

பிரார்த்தனையும் வேண்டுதலும்

———————————

நம் பெரியோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள், ‘நீ கடவுளை பிரார்த்திப்பாயானால் நீ விரும்பும் யாவும் கைகூடும்’ என்று. இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முழுவதுமாக ஏற்கமுடியாது. யோசித்துப் பார்த்தால் அப்படி எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் நடந்துவிடுவதில்லை. கடவுள் அப்படி நடத்திக் கொடுப்பதாய் இருந்தால் கவுளின் ஸ்தானம் வேலைக்காரனின் நிலைக்கு வந்துவிடும்.

எதற்கும் ஒரு தகுதியும் தேவைப்படுகிறது. ஆக, எவருடைய பிரார்த்தனைக்குத்தான் செவி சாய்க்கலாம் என்பது அவரின் (கடவுளின்) விருப்பத்தைப் பொருத்த விஷயம். லாட்டரி சீட்டு வாங்கினால் பரிசு விழும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அது எல்லோருக்குமே விழுந்து விடாது. அப்படி நடக்கவும் முடியாது. ஆனால் பிரார்த்திப்பது அன்றி மனிதன் வேறு ஒன்றும் செய்யவும் முடியாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பிரார்த்திப்பது மட்டும் அல்லாமல் அறிவுபூர்வமான சுய முயற்சிகளும் இருக்க வேண்டும். செயல் என்றால் அதற்குக் கண்டிப்பாக விளைவும் உண்டு. 

வேண்டுதல் செய்து கொள்பவர்கள், “பகவானே, நீ எனக்கு இதைச் செய்து கொடு, நான் உனக்கு இன்ன காணிக்கை கொடுக்கிறேன்” என்று வேண்டிக் கொள்வார்கள். உண்மையில் சொல்லப் போனால் எல்லாமே கடவுளுடைய பொருள் ஆனதால் அவருக்குக் கொடுக்க மனிதனுக்கென்று தனியாக ஒன்றும் இல்லை. ஆனால் வேண்டிக்கொண்டபடி செய்யா விட்டால் அவன் சோதனைக்கு உள்ளாக்குகிறான். வேண்டுதலை நிறைவேற்றியே தீர வேண்டும்.

     நான் இனி பிரார்த்தனையால் பயன் அடைந்த கதை ஒன்றையும் வேண்டுதலால் சோதிக்கப்பட்ட கதை ஒன்றையும் சொல்கிறேன். இவை இரண்டுமே இந்தக் கலிகாலத்தில் உண்மையாக நடந்த சம்பவங்கள்தாம்.

சாக்ஷி

ஒரு ஊரில் ஒரு கோமுட்டி செட்டி இருந்தான். அவன் மிகவும் நேர்மையானவன். திருப்பதி வெங்கடாசலபதியிடம் பக்தி கொண்டவன். அவனுக்கு ஒரு முறை கொஞ்சம் பணத் தேவை உண்டாயிற்று. அந்த ஊரில் வட்டிக்குப் பணம் கொடுப்பவனிடம் கடன் வாங்கினான். கடன் வாங்கும் போது அங்கு ஒருவன் சாக்ஷியாக நின்றிருந்தான். சில மாதங்களில் அவன் வாங்கிய கடனைத் திருப்பி அடைத்துவிட்டான். ஆனால் அப்போதும் சாக்ஷி வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவனுக்குத் தோன்றவில்லை. கடன் கொடுத்தவன் அதைப் பயன்படுத்திக் கொண்டான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டான்.

செட்டி அதிர்ந்து போனான். நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் கொடுத்ததை தக்க சாக்ஷியோடு உறுதிப்படுத்தினான் வட்டிக் கடைக்காரன். செட்டியை நீதிபதி விசாரித்தபோது அவன் அழுதுகொண்டே கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதாகச் சொன்னான். அது உண்மையாக இருக்கக்கூடும் என்றே நீதிபதிக்குத் தோன்றியது. அவர் செட்டியிடம் கேட்டார், “நீர் கடனைத் திருப்பிக் கொடுத்தபோது அங்கு யாராவது சாக்ஷியாக இருந்தார்களா?” செட்டி, “சாக்ஷியா? வெங்கடாசலபதிதான் சாக்ஷி” என்று கண்ணீர் விட்டபடி கூறினான்

கோர்ட்டார் அது ஒரு மனிதன் என்று எண்ணிவிட்டார். உடனே ‘வெங்கடாசலபதி!’ என்று மூன்று முறை உரத்த குரலில் அழைக்கப் பட்டது. ஒரு உயரமான மனிதன் நெற்றியில் பெரிய நாமத்தோடும், பஞ்சகச்ச வேட்டியோடும், மேலே மஞ்சள் அங்கவஸ்திரதோடும் சாக்ஷிக் கூண்டில் வந்து நின்றான். அவனைப் பார்த்த செட்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த மனிதனை  செட்டி இது வரை பார்த்ததே இல்லை. செட்டி கடனைத் திருப்பிக் கொடுத்தபோது தான் சாக்ஷியாக அங்கு இருந்ததாக அவன் சொல்லிவிட்டு கூண்டைவிட்டு அகன்று போனான். 

தீர்ப்பு செட்டி பக்கம் ஆனது. நீதி மன்றத்தை விட்டு வெளியில் வந்த செட்டி எங்கு தேடியும் தனக்கு சாக்ஷி சொன்ன மனிதனை கண்டுபிடிக்க முடியவில்லை.

வேண்டுதல்

—————-

தர்மசீலை என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அன்பான நல்ல கணவனும், ஆதரவான மாமன் மாமியும், வளமான வாழ்வும் அமைந்திருந்தன. அவர்கள் திருப்பதியில் வசித்து வந்தனர். ஆனால் வருடங்கள் பல ஆனபோதும் அவளுக்குப் பிள்ளைப் பாக்கியம் கிடைக்க வில்லை. எத்தனையோ வேண்டு தல்கள், மருந்து மாத்திரைகள் என்று செலவு செய்தும் பலன் இல்லை.

நாட்கள் செல்லச் செல்ல கணவனின் அன்பும் மற்றவரின் ஆதரவும் குறையலாயின. அவளை மலடி என குறை சொல்லத் தொடங்கி விட்டனர். இந்த ‘மலடி’ என்ற சொல் அவளை மிகவும் பாதித்துவிட்டது. அவள் மிகவும் உருக்கமாக “வெங்கடாசலபதியே என் மலட்டுக்குறை தீரும்படி எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அருள்.  எனக்கு குழந்தையைக் கொஞ்சும் பாக்கியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் குழந்தையை உன் தேர் வீதியில் பவனி வரும்போது தேர்சக்கரத்தின் முன்னால் பலி கொடுத்துவிடுகிறேன்” என்று வேண்டிக் கொண்டாள்.

விரைவில் அவள் கர்ப்பம் தரித்தாள். வீட்டில் அவளுக்கு ஏக உபசரிப்பு, மரியாதை. அவளும் அதீதமான மகிழ்ச்சியில் இருந்தாள். தன் பிரார்த்தனை பற்றி அவள் பெரிதாக நினைக்கவில்லை. அனேகமாக  மறந்தே போனாள். உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆன சமயம் தேர் திருவிழா வந்து விட்டது. தேர் வீதியில் அவள் வீட்டின் முன்பு வந்து நின்றுவிட்டது. எத்தனையோ முயன்றும் அதை மேலே இழுக்க முடியவில்லை. யானை பின் புறமாக தேரை மோதியும் அது அசைய வில்லை. நாளெல்லாம் அங்கேயே நின்றது. இது ஊர்மக்களுக்கு அதிசயமாகவும் கலவரமாகவும் இருந்தது. ஒருவருகொருவர் அதுபற்றி பேசிக் கொண்டனர்.

தருமசீலை ஒரு முடிவுக்கு வந்தாள். தன் குழந்தையைத் தோளில் சாய்த்த படி வீதியில் இறங்கினாள். சட்டென்று தேர் சக்கரத்தின் முன்பு குழந்தையைக் கிடத்தித் தானும் படுத்துவிட்டாள். அதே சமயம் ஒரு பயங்கரமான புயல் வீசத் தொடங்கியது. தேரின் பின்புறம் நின்றிருந்த யானை விரைந்துவந்து தேரை பக்க வாட்டில் ஒரு உந்து உந்தியது. தேர் தடம் மாறி நகர்ந்து கொஞ்சம் விலகி ஓடத்தொடங்கியது. புயலும் நின்றுவிட்டது. குழந்தையும் தாயும் எவ்வித சேதாரமுமின்றிப் பிழைத்துக் கொண்டனர்.

சாமியும் பூதமும்

——————

One Comment on “மனக் கருவூலத்திலிருந்து -பூரணி”

Comments are closed.