
காலையில்
கண் விழிப்பதை
அற்புத உறவுகளை
மனதிலுள்ள பல கேள்விகளில் ஒன்றுக்கு
கிடைக்கும் விடையை
முன்பின் தெரியாத
ஒருவருக்கு உதவும் வாய்ப்பை
பேரிழப்பிற்குப் பின்னும் சிலரிடம் காணும்
அற்புத மன வலிமையை
கொண்டாடுகிறேன்
கால் நனைக்கும்
கடல் அலைகள்
காக்கையின் கரையல்
விடியலில் சிவக்கும்
வானம்
புல்லின் மேல் மின்னும்
பனித்துளிகள்
மரங்களின் கீழ்
கம்பளம் விரிக்கும்
சிகப்பு பூக்கள்
இவற்றையும்

அத்தகைய காலை நேரங்கள் அனைத்துமே ‘உங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம்’ தான்.