
பல்லியும் இசைத்தது
பொருள்தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என வருந்தும் தோழியைப் பார்த்து அவர் வந்து விடுவார். நான் வருந்துவேன் என்று நீ வருந்தாதே எனத் தலைவி தேற்றும் பல காட்சிகளைக் கலித்தொகையில் பார்க்க முடிகிறது.
தலைவி தோழியிடம் யானை, புறா மற்றும் மான் போன்றவற்றின் காதலைப் பார்க்கும் தலைவனுக்கு என் நினைவு வரும். அவன் என்னை ஏமாற்றி வாடச் செய்யும் எண்ணம் கொண்டவன் அல்லன். மேலும் பல்லியின் சொல்லும் நற்சகுனமாக ஒலிக்கிறது எனவே அவன் வந்து விடுவான் என அக்கலித்தொகைப் பாடலை முடிக்கின்றாள் தலைவி
”………என ஆங்கு
இனைநலம் உடைய
கானம் சென்றோர்
புனைநலம் வாட்டுநர்
அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்குஒத்து
இசைத்தன;
நல்எழில் உண்கணும்
ஆடுமால் இடனே”

பல்லி சகுனம் பார்ப்பது எப்போதோ தொடங்கிவிட்டது போல. பாருங்கள் எழிலன்.
மகிழ்ச்சி.