
திருவோடு ஏந்துகின்ற ஆண்டி..
அவன் தெருவோரம் இருக்கிறவன் தான்டி.!
ஒரு ஜானு வயிற்றுக்கே வேண்டி..
பாடுறானே பட்டிணத்து ஆண்டி.!
கந்தனுக்கு முன்நின்று வேண்டி..
அவன் கண்டதையே பாடுகின்ற ஆண்டி..
சொந்தமில்லை பந்தமில்லை ஏன்டி?
அவன் சொல்லுறதை கேட்டுத்தான் பாரேன்டி!
ஊர்குடியை ஏய்க்கவில்லை சுரண்டி!
அவன் ஊர்ஊராய் அலைகின்ற ஆண்டி.!
பேருபுகழ் கிடைப்பதற்க்கு வேண்டி..
அவன் பித்தலாட்டம் செய்யாத ஆண்டி!
சிந்தனை வனத்திலோர் ஆண்டி..
அவன் சிந்தையெல்லாம் சமத்துவமே தாண்டி..
பொருளாசை பொன்னாசை ஏதுமில்லா ஆண்டி..
அவன் போறவழி தெருவெங்கும் தேவன் வருவான்டி.!
