
வீட்டு வாசலில் இருந்த
அந்த மரத்தில்
சின்னச்சின்ன
கம்புகளைச் சுமந்தும்
தென்னை நார்களைச் சுமந்தும்
கிரஹப்பிரவேசம் செய்து
கொண்டிருந்த
அந்தப்பறவையும் குஞ்சுகளும்
அன்பினால்
அளவளாவிய தருணம்
நான் புதுவீடு கட்டி
நடந்த புதுமனைப்புகுவிழாவில்
மனைவியோடும் மக்களோடும் பால்காய்ச்சிய
நினைவுகளை கண்முன்னே
கொண்டுவந்தன…
பறவைக்கு மரமே வீடு..
எனக்கோ வீடே மனம்…
அவை மழைகளில் நனையும்..
நான் எம்மக்களில் நனைவேன்..
அவை இரைக்காக பறக்கும்..
நாங்கள் இறைக்காக பறப்பேன்..
அவை கீச்சிடும்..
நாங்கள் பேசுவோம்…
அவை கொஞ்சி விளையாடும்..
நாங்களும் கூட கெஞ்சியும் கொஞ்சியும்…
பறவைக்கு கூடெனும் மரக்காடு…
எங்களுக்கோ வீடெனும்
மனக்காடு…
அவை நாங்களாக
விரும்புகின்றன..
நாங்கள் பறவைகளாக
விரும்புகின்றோம்..
அவை கூடு விட்டு கூடு பாய்வதில்லை..
தற்போது என் வீடு பாய்ந்துவிட்டன..
நாங்கள் வீடு விட்டு வீடு
எப்போதாவது மாறுவோம்…
தற்போது அவற்றின்
கூட்டில் நாங்கள்…
பறவைகளாக சிறகடிக்கிறோம்
நாங்கள்..
நாங்களாக வாழ்கிறது
அப்பறவைகள்!
