
கண்ணுக்கெட்டி
வாய்க்கெட்டாமல்
கழிகிறது
கைக்கெட்டாத காலம்
வாழ்வின்
ஒவ்வொரு கணமும் தீர்கையில்
மனம்
நீரில் ஊறிய பஞ்சாகிறது
ஆண்டாளின் பாசுர கானம்
மாயவனைத் தேடும் உள்ளம்
கானல் நீராய் பாய்ந்திடும்
சோக வெள்ளம் ஜீவ நதியாய்….
மீராவின் தாபங்கள்
தம்பூராவில் விரகங்களாய் பீறிடுகின்றன
பிருந்தாவனத்தின் எழில் குலைகிறது…
பூக்கள் நீயே
பாக்கள் நீயே
நேசமே என் நாட்களும் நீயே
விநோதமான ஊர்
விநோதமான மனிதர்கள்
வினோதமாக ஓடுகிறது காலம்
கல் நெஞ்சுக்காரி
சொல்லைக் கொன்று விட்டாய்
நில்லாமல் நெஞ்சில்
கொட்டுகிறது உதிரம்…
எண்ணெய் தண்ணீரோடு கலக்கவில்லை
தண்ணீர் எண்ணெயோடு சேரவில்லை
பூனை நிழலைப் பார்த்து பயப்படுகிறது
நிழல் பூனையைக் கண்டு அஞ்சுகிறது.
