
கதை கருத்தின் விஸ்வரூபம்
கவிதை கற்பனையின் விஸ்வரூபம்
வன்மம் கோபத்தின் விஸ்வரூபம்
காமம் காதலின் விஸ்வரூபம்
துயரம் பாவத்தின் விஸ்வரூபம்
ஞானம் போதனையின் விஸ்வரூபம்
மௌனம் பொறுமையின் விஸ்வரூபம்
விவேகம் தெளிவின் விஸ்வரூபம்
வெற்றி உழைப்பின் விஸ்வரூபம்
கோபம் பொறாமையின் விஸ்வரூபம்
தோல்வி அறியாமையின் விஸ்வரூபம்
ஆனந்தம் நற்செயலின் விஸ்வரூபம்
அர்த்தம் வார்த்தையின் விஸ்வரூபம்
அற்புதம் கருணையின் விஸ்வரூபம்
ஆசை கனவுகளின் விஸ்வரூபம்
ஆபத்து அஜாக்ரதையின் விஸ்வரூபம்
மரணம் விதியின் விஸ்வரூபம்

அருமை 🌹🌹🌹🌹
விஸ்வரூபத்தின் பல அவதாரங்கள் மிகச் சிறப்பாகப் பட்டிபலிடப் பட்டுள்ளது மிக மிக அருமை . தங்களைத் தேடிவரும் சிறப்புகளும் விருதுகளும் தங்கள் கவித்துவத்தின் விஸ்வரூபம். மனமார்ந்த வாழ்த்துகள் தி வே விஜயலட்சுமி.
அற்புதம்.