
அழகியசிங்கர்
முன் ஒரு காலத்தில் காசியில் போதிசத்துவர் ஒரு வியாபாரி வீட்டில் பிறந்து வளர்ந்து வந்தார். அப்போது அவருக்கு சமர்த்தன்” என்ற பெயர் வழங்கி வரலாயிற்று. அவர் பெரியவரானவுடன் ‘வெகுசமர்த்தன்’ என்ற மற்றொரு வியாபாரியுடன் சேர்ந்து நண்பராக வியாபாரம் நடத்தி வந்தார்.
ஒருநாள் இருவருமாகச் சேர்ந்து ஐநாறு வண்டிகள் நிறையச் சாமான்களை ஏற்றிக் கொண்டு, காசி நகரத்திலிருந்து புறப்பட்டுத் தங்களுடைய பொருள்களை எல்லாம் விற்றுப் பணமாக்கிக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள். அந்த லாபத்தைப் பங்குபோடும் வெகுசமர்த்தன் என்ற வியாபாரி,
தனக்கு இரண்டு ப லாபம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதை சமர்த்தன், “நாம் இருவருமே சமமான பொருள்களை மாடுகளையும் வண்டிகளையும் எடுத்துச் சென்று, லாபம் சம்பாதித்தோம். அப்படியிருக்க உனக்கு மட்டும் எதற்காக இரண்டு பங்குகள் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு வெகு சமர்த்தன்
“நான் வெகுசமர்த்த ன் ! நீ வெறும் சமர்த்தன். அதனால்தான் உன்னைவிட எனக்கு இரண்டு பங்கு லாபம் கொடுக்கவேண்டும்!” என்றான்.
இதனால் அவர்களிருவரும் வாக்குவாதம் புரிய ஆரம்பித்தார்கள். திடீரென்று
வெகுசமர்த்தனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எனவே, அவன் தன்னுடைய கிழவனான தந்தையை அழைத்து காட்டிலுள்ள ஒரு மரப்பொந்தில் ஒளிந்துகொள்ளச் செய்து, “நாங்கள் இருவரும் நீங்கள் மறைந்திருக்கும் மரத்தருகே வந்து வாக்குவாதம் பரிவோம்,அப்போது நீங்கள், மரப்பொந்தில் மறைந்திருந்து வெகுசமர்த்தனுக்கு இரண்டு பங்கு லாபம் கொடுக்க வேண்டும் என்று கூறுங்கள்!” என்று ஏற்பாடு செய்துவிட்டு வெறும் சமர்த்தரான போதிசத்துவரிடம் வந்தான்.
பிறகு அவரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் ஒரு தெய்வீக மரத்தினருகே தங்களுடைய வாதத்தை அந்த மரத்தடியில் முறையிடலாம் என்று கூறினான். அதன்படியே இருவரும் காட்டுக்குச் சென்றார்கள். மரத்தை நெருங்கியவுடன் வெகுசமர்த்தன் அந்த மரத்தை நோக்கி, “மரத்திலுள்ள தெய்வமே எங்கள் வழக்கிற்கு தீர்ப்பு செய்” என்று வேண்டினான். அப்போது அந்த மரப்பொந்தில் மறைந்து கொண்டிருந்த வெகுசமர்த்தனின் தந்தை, வழக்கைச் சொல்லும்படி மாற்றுக் குரலில் கூறினான்.
உடனே வெகுசமர்த்தன் அந்த மரத்தை நோக்கி, “பிரபுவே இதோ வெறும் சமர்த்தன் உங்கள் அருகில் இருக்கிறான். இதோ நான்
வெகுசமர்த்தனும் உங்கள் அருகில் நிற்கிறேன். நாங்கள் இருவரும் கூட்டாக வியாபாரஞ் செய்தோம். இதில் யார் யாருக்கு
எவ்வளவு சேரவேண்டும் என்று தீர்ப்புக் கூறுங்கள் என்று கேட்டான்.
“சமர்த்தன் ஒரு பங்கும் வெகு சமர்த்தன் இரண்டு பங்கும் பெற்றுக் கொள்ள வேண்டும்!” என்று அந்த தெய்வீக மரம் பதில் கூறியது.
இந்த முடிவைக் கேட்ட சமர்த்தருக்கு அந்த மரம் உண்மையில் தெய்வீக மரம்தானா அல்லது இல்லையா என்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
உடனே, அவர் அந்த மரப்பொந்தில் வைக்கோலை நிரப்பித் தீ மூட்டினார்.
அப்போது மரப்பொந்தில் மறைந்து கொண்டிருந்த வெகுசமர்த்தனின் தந்தை எரிகிற தீச்சுவாலையில் பொசுக்கப்பட்டான் , பிறகு, மேலேயிருந்த
கிளையொன்றைத் தாவிப்பிடித்துக் கொண்டு வெளியே வந்தான். பிறகு தரையில் விழுந்து பின்வரும் பாடலைப் பாடினான்.
சமர்த்தன் பொருத்தமாகவும் வெகுசமர்த்தன் பொருத்தமின்றியும் பெயர் கொண்டனர். நான்தான் வெய் நெருப்பில் வறுத்தெடுக்கப்பட்டேன்!”
பிறகு, இரண்டு வியாபாரிகளும் இலாபத்தைச்: சமமாகப் பகிர்ந்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
