தொட்டிக்குள் அடங்கிவிடுகிறது/தளிர் சுரேஷ்

பறித்துச்செல்கிறது!
தடுப்பாரில்லை!
பழுத்த இலைகளை காற்று

தொட்டிக்குள் அடங்கிவிடுகிறது
வளர்ச்சி!
வாஸ்துமீன்!

எல்லோரும் உறங்குகையில்
விழித்துக்கொண்டிருக்கிறது!
இரவு!

நல்வரவு சொன்னதும்
மிதித்தபடி கடந்தார்கள்!
மிதியடி

மழைவிட்ட இரவில்
நிரந்தரமாய் அணைத்துக்கொண்டது!
குளிர்!

மொழி தெரியா பாடல்!
ஈர்க்கிறது!
இசை!

அழுகிறது குழந்தை!
சாப்பிட மறுக்கிறது
பொம்மை!

பசித்துக்கொண்டே இருந்தது
நிறையவே இல்லை!
கோயில் உண்டியல்!

அடித்ததும் ரசித்தார்கள்
கோவில் திருவிழாவில்
மேளம்!

வெட்ட வெட்ட
வளர்ந்துகொண்டே இருக்கிறது!
தீவிரவாதம்!

நாள் முழுக்க உண்ணாவிரதம்!
யாரும் முடித்து வைக்கவில்லை!
ஏழையின் பசி!

மறைந்த சூரியன்!
மலர்தூவி அஞ்சலி செய்தன
மரங்கள்!

எதிர் வீட்டின் அழகு!
மறைத்துக்கொண்டிருந்தது!
தன் வீட்டு அழுக்கு!