இலக்கிய இன்பம் 25/கோவை எழிலன்

பித்தரும் உறங்கினர்

கடந்த பாடலுக்கு நேர்மாறான பாடல் மீண்டும் கம்பனிடமிருந்து. ஒரு மனிதன் நினைத்தவுடன் உறங்க முடியும் என்றால் அவன் மனதில் நிம்மதி இருக்கின்றது எனப் பொருள். சுந்தர காண்டத்தில் அனுமன் இரவு நேர இலங்கையைக் காணுகிறான்.

அப்போது இராவணனது செங்கோல் வழுவா ஆட்சியில் மக்கள் கவலையில்லாது உறக்கம் கொண்டனர் எனக்கூறும் கம்பன் “நாள்தோறும் நியமங்களைச் செய்யும் உத்தமர்களும் இவற்றைக் கடந்த யோகிகளும் மும்மதம் கொண்ட யானைகளும் உறங்கினர். அவர்கள் மட்டும் அல்ல புத்தி பேதலித்த பித்தர் கூட மன அமைதி கொண்டு உறங்கினர் என்றால் மேலே என் சொல்ல” என்று முடிக்கின்றான்.

”நித்தம்நியமத் தொழிலர்ஆய், நிறையும் ஞானத்து
உத்தமர்உறங்கினர்கள்; யோகியர் துயின்றார்;
மத்தமதவெங்களிறு உறங்கின; மயங்கும்
பித்தரும்உறங்கினர்; இனிப் பிறர்இது என்னாம்!”