நிசப்தத்தின் நுண் கணம்/வசந்ததீபன்


மனிதன்
மகத்துவமானவன்
என்பது
மாறாத் தீராக் கனவு
இருளுக்குள் பூ

மேகத்துள் மின்னல்
கருவிழியைச் சுற்றி
வெண்விழிப் படலம்
மறக்கும் அன்பு
கடந்து போகும் நேசம்
காற்றில் புற்கள் முறிந்து போகாது
எதிரே சாவு வீடு
கதவுகளை திறக்க முடியவில்லை
ட்ரம்பெட்டிலிருந்து துக்க வெள்ளம் இசையாய் பாய்ந்து கொண்டிருந்தது
பறித்த பூக்களிலிருந்து
பிணநாற்றம் வீசுகிறது
காம்புகளிலிருந்து உதிரம் வழிகிறது
அழுகை காற்றில்
அனலாய் தெறிக்கிறது
முற்போக்கு பிற்போக்கு
தற்போக்கு புறம்போக்கு
போக்குகள் பலவிதம்
கண்ணாடிச் சில்லுகள்
வெயிலில் பிரகாசித்தன
கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் சேம்பிலைத் தண்ணீராய் பளபளத்தன
சிதறிப்போனது பிஞ்சு இருதயம்
வலியைப் பற்றிப் பேசாதீர்கள்
வலி நிவாரணிகளைப் பட்டியலிடுங்கள்
வலியால் குமைந்து
போயிருக்கிறது நெஞ்சம்.

🦀

🦀