ஒரே ஒரு நாள்/அதங்கோடு அனிஷ்குமார்

எல்லாப் புகார்களும்
என்னையே
குறி வைக்கின்றன.

எல்லா உதடுகளும்
என்னைப்
பரிகாசம் செய்கின்றன.

எல்லா செய்கைகளும்
என்னைப்
பழித்துக் காட்டுகின்றன.

எல்லா நாற்காலிகளும்
என்னைத்
தீர்த்துக்கட்ட
துடிக்கின்றன.

எல்லா அவைகளும்
என் மேல்
கண்டனத் தீர்மானங்கள்
நிறைவேற்றுகின்றன.

எல்லா சபைகளிலும்
நான்
விவாதப் பொருளாகி
பல நாட்களாகி விட்டது.

ஒரே ஒரு நாள் மட்டும்
நான்
நானாயிருந்தது
தவறா?