தீர்க்கதரிசி/ப.மதியழகன்

இந்த உலகத்தின் அழையா விருந்தாளி நான்
எந்த வேதமும்
என் மூலமாக இறக்கி அருளப்படவில்லையென்றாலும்
நான் ஓர் தீர்க்கதரிசிதான்
பாவிகளுக்காக வந்த
இரட்சகன் அல்ல நான்
நீங்கள் கவனித்து இருக்கலாம்
யூதர்களின் கிறிஸ்து என்று
என்றைக்குமே நான் என்னைச்
சொல்லிக் கொண்டதில்லை
பூமியில் வேர் பிடித்துவிட்டவர்களை
என் பிரசங்கம்
உலுக்கிப் பார்க்கும்
பூமிக்கு அப்பாற்பட்டதை
நான் உங்களுக்கு கொண்டுவந்து
சேர்க்கிறேன்
நீங்கள் அதிமனிதன் என்ற
முத்திரையோடு வா என்கிறீர்கள்
மனிதர்களின் ஜோடனையான
வார்த்தைகளால் நான் என்றுமே
உச்சிக் குளிர்ந்ததில்லை
வாழ்க்கை ஒரு சூதாட்டம்
பகடையாடுவதில் நானொரு சகுனி
உயிர்களுக்கு தப்பிக்கும்
வாய்ப்பை நான் வழங்குவதில்லை
இறைச்செய்தியை உங்களுக்கு
இறக்கி வைக்க
இனியாரையும் இறக்கப்
போவதில்லை நான்!

One Comment on “தீர்க்கதரிசி/ப.மதியழகன்”

Comments are closed.