அலகிலா விளையாட்டு/தங்கேஸ்

நேற்று சொன்னது போல இருக்கிறது
ஆனால் இந்த மஞ்சள் அரளிக்கன்று
மொட்டை மாடி கைப்பிடிச் சுவரளவு
வளர்ந்து விட்டது

நேற்று விடிவெள்ளி முளைத்திருந்த
இடத்தை இன்று எதை இட்டு நிரப்பும் வானம்
என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது
இணையாக பறந்து செல்லும்
ஒரு சோடி வெண்புறாக்கள்
வானத்தை மறக்கடிக்கின்றன

அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே
கரும் மேகங்களுக்குள் மறையும் போது
காரணமற்று பொங்கி பெருகும்
உன்னுடைய துக்கம்
அதற்கொரு அலகிலா
விளையாட்டாக இருக்கிறது

One Comment on “அலகிலா விளையாட்டு/தங்கேஸ்”

Comments are closed.