வெட்டு /தி சோ வேணுகோபாலன்

‘இரவரசி’ என்கின்றார் ;
இத்தனை நாள் பார்த்ததில்லை !
இன்றுணர்ந்தேன்.
கரிசனையோ டுன்வீட்டுக்
கிணற்றுக்குள் வீழ்ந்தவளை
கை நீட்டிக் காப்பாற்றக்
கூப்பிட்டாய்
அன்று .
இன்றிரவு என்தோட்டத்து இறைகிணற்றில்
ஐயையோ! ,
ஆடைநழுவ அங்கம் நெளித்துக் கண்
ஜாடை அழைப்பில் …..
சேச்சேச்சே
………
நீட்டிய கையை மடக்கு!
திரும்பிப்போ !
இல்லை …. … நில் !
எடு ஒரு கல். ‘
ஏசு’ வருமுன்
வீசி எறி,
மதிமுகத்துச் சதித்தளுக்கை
அலைக்கை குலைக்கட்டும்.
………………..
தொட்டுத் தூக்கிவிடத்தான்
நீண்டகைகளையே
வெட்டி யெறிந்துவிடு:
வேட்கைத் தொழு
நோய்வந்து
ஓட்டி உருக்குலைக்கும்!
………………..
நாணமிலாப் பரத்தை
காணடா நிலவு!