
வாணி அமைத்திட்டாள்
பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிப் பாக்கள் பல புனைந்த போதிலும் மரபில் தோய்ந்தவர். அவரையும் அறியாமல் அது சில இடங்களில் வெளிப்படுவது உண்டு. அத்தகைய ஒரு பாடலைக் காண்போம்.
நன்றாகப் படிப்பவரையும் புலவர்களையும் சரஸ்வதி கடாச்சம் கொண்டவர் என்று கூறுவது மரபு. பாவேந்தர் பகுத்தறிவுப் பாசறைக்கு வந்தபின் எழுதிய காவியமாம் புரட்சிக்கவியில் கவிஞன் உதாரன் முழுநிலவைக் கண்டு உனர்ச்சி பொங்கி கவிதை வடிக்கிறான். அதை வருணிக்கும் கவிஞர் கடவுள் நம்பிக்கையை விட்ட போதும் “வாணி அமைத்திட்டாள் நற்கவிதை” அதை உதாரன் மழை போல் பெய்தான் என்கிறார். பாடல் கீழே
“அமுதவல்லி காத்திருந்த
மேடை யண்டை
அழகியபூஞ் சோலையண்டை
உதாரன் நின்றே
இமையாது நோக்கினான்
முழு நிலாவை
இருவிழியால் தழுவினான்,
மனத்தால் உண்டான்!
சுமைசுமையாய் உவப்பெடுக்க
உணர்வு வெள்ளம்
தூண்டிவிட ஆஆஆ
என்றான், வாணி
அமைத்திட்டாள் நற்கவிதை
மழைபோற் பெய்தான்!
அத்தனையும் கேட்டிருந்தாள்
அமுத வல்லி”
