வலி/அதிரன்

வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை ..
எல்லா வலிகளையும் சொல்லி விட இங்கு வார்த்தைகளும் இல்லை….

வலியோடு தொடங்கி வலியோடு முடியும் இந்த வாழ்வில்
சொல்லப்பட்ட வலிகளை விட சொல்லப்படாத வலிகளே அதிகம்…..

சொல்லப்பட்ட வலிகள் உயிர் கொண்டு திரிகின்றன.

சொல்லப்படாத வலிகள் கல்லறையில் துயில்கின்றன….