வலி/அழகியசிங்கர்

வலி உண்மையானது
அதை விவரிப்பது மூலம்
உங்களால் ஒன்றும்
செய்ய முடியாது
நீங்கள் எப்போதும்
அதற்கு அடிமை ஆக வேண்டியதுதான்
நீங்கள் வலியைப் பார்த்து
ஒரு புன்னகை செய்யலாம்
அது கூட உங்களை அனுமதித்தால்தான்
வலியைப்பற்றி கற்பனை செய்யலாம்
கவிதை எழுதலாம்
வேற என்ன சொல்ல
இருக்கிறது