கவிப்பேறு/தி சோ வேணுகோபாலன்

சூனியத்தைச் சொல்லால் மோதிச்
சுடரெடுத்துத்
தோன்றியதைத் தொட்டுத்
தொடர் மறைந்த வாக்கியத்தில்
மோனத் தவமூர்த்தி
முத்திரையை வைத்தெந்தன்
வாசகரை
வெட்ட வெளியினிலே
வழிதேட
விட்டுவிட்டுப் போகும்
வித்தையதே
என் கவிதை !