பசி/செ.புனிதஜோதி

உயிருக்கு
பயந்து
ஓடும்
கரப்பான்பூச்சி
பசியை
கொன்றுப்
புதைக்க
விரட்டும்
பல்லி…
இருவரின்
வேட்டையின்
வேட்கைக்கு
பேறாதரவுத் தந்து
நிற்கும்
என் விழி…

மிகப்பெரிய
ஓட்டப்பந்தயத்தில்
ஏழுகால் பாய்ச்சலில்
பல்லித் தாவி
முழுங்கியது
பசியை.