
தேட வைத்த தென்றலே நீ
வாட வைத்துப் போனதென்ன நியாயம்
எல்லாம் மாயம்
கூட வந்த அன்றிலே நீ
கூடுடைத்துப் போவதென்ன நியாயம்
எல்லாம் மாயம்
சரணம் 1
நாள் கணக்கில் பார்த்திருந்து
உள் மனத்தில் பூத்திருந்து
ஊர் முழுக்கப் பேச வைத்த காதல் மறக்குமா?
ஏன் மறைக்க வேண்டும் அன்பே
ஏன் மறுக்க வேண்டும் கண்ணே
வேர்ப்பிடித்து நீர் தெளித்த காதல் கருக்குமா?
(தேட வைத்த….)
சரணம் 2
நீ விரும்பிக் கேட்டிருந்த பூ அரும்பிப் பூத்திருக்க
ஏன் திரும்பிப் போக வேண்டும் நில் நீ நில்!
ஏன் நடிக்க வேண்டும் அன்பே
ஏன் துடிக்க வேண்டும் கண்ணே
வீண் பிடிவாதம் எதற்கு, சொல் நீ சொல்!
(தேட வைத்த….)
