“மனிதனும் தூக்கணாங் குருவியும்”

மீ.விசுவநாதன்


ஒவ்வொரு புல்லாய் எடுத்துக்கட்டிய தூக்கணாங் குருவிக் கூட்டின் உள்ளே குஞ்சுகளின்குதூகலக் குரல்வெளியே பேய்மழை கொட்டுகிறது
பக்கத்தில்ஒரு பெரிய அடுக்ககம் மழையில் சரிந்து விழுகிறதுமனிதப் பிஞ்சுகள் இடிபாடுகளுக்கு இடையில் இறந்து கிடப்பதைப் பார்த்துக் கத்துகிறது கோபத்தில் தூக்கணாங்குருவி
“கூப்பிடு அந்த என்ஜினீயரையும், மந்திரியையும்”.