–

இன்று பிறக்கிறாய்
எனக்காய் கொஞ்சம்
கூடுதல் இனிப்புடன்.
தையின் துவக்கமும்
தனியான துலக்கமும்
எப்போதும்
அடிப்பாகக்
கன்னல் சுவை.
உள்ள உவகையை
பொங்கப் பொங்கத்தந்து
அமுதக்கலயம் பொங்கி வழியும்
அந்த பொங்கலின்
பூரிப்பு நின்சிறப்பு.
ஊரே கொண்டாடுகிறது
உன் வருகையை உற்சாகமாய்.
எனக்குத் தெரியும்-
இது ஒரு திருநாள்
நீ உற்சவச்சாமி!
வாழ்த்தி வணங்குகிறேன்
வரம்கொடு என்றென்றும்.
–
