இன்னொரு புத்தகத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஏற்கனவே பிறமிளை பற்றியும், ஞானக்கூத்தன் பற்றியும் புத்தகங்கள் எழுதி உள்ளேன்.
'பிரமிளும் விசிறி சாமியாரும்' என்ற புத்தகத்தை 2018ஆம் ஆண்டு கொண்டு வந்தேன். சமீபத்தில் கூட அந்தப் புத்தகத்தை விரும்பி வாங்கினார்கள். அந்தப் புத்தகம் எழுதும்போது அந்தப் புத்தகத்தை முடிக்க முடியாமல் ரொம்ப நாட்கள் அவதிப் பட்டேன். அவருடைய மரணத்தைப் பற்றி எழுதத்தான் எனக்குச் சங்கடமாக இருந்தது.
இரண்டாவது புத்தகம் ஞானக்கூத்தன் பற்றி. இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பின் கீழ் ஞானக்கூத்தன் பற்றி எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 2021ல் சாகித்திய அகாதெமி வழியாக அந்தப் புத்தகம் வெளிவந்தது. இந்தப் புத்தகம் முடிக்க எனக்கு ஒரு வருடம் ஆகிவிட்டது.
மூன்றாவது புத்தகம் அசோகமித்திரன் பற்றி சமீபத்தில் கொண்டு வந்த புத்தகதம். புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்த புத்தகம்.
அசோகமித்திரன் தி.நகரிலிருந்தபோது நான் அதிக நாட்கள்வரை பார்க்கப் போயிருக்கிறேன். என் அனுபவத்தைத்திரட்டி எழுதியிருக்கிறேன்.
இந்த மூன்று புத்தகங்களும் என்னிடம் விற்பனைக்குள்ளன.
பிரமிளும் விசிறி சாமியாரும் புத்தகம் ரூ.90. ஞானக்கூத்தன் புத்தகம் ரு.50. அசோகமித்திரன் புத்தகம் ரூ.100
குகூள் பே மூலம் பணம் செலுத்தி வாங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். குகூள் பே அலைபேசி எண் . 9444113205.
