மார்கழி பள்ளியெழுச்சி/வேலாயுத முத்துக்குமார்

மாடத்து துளசி இலையின் மீது
இறங்கியிருந்தது
மார்கழியின் பனித்துளி
வைகறையில் இரை தேடி வந்த
தேன்சிட்டு
பனித்துளியை விழுங்கிக் கொள்கிறது
பின் சிறு உடலெங்கும் பரவிய
குளிர்ச்சியை செரிக்க முடியாமல்
ஏகாந்த வெளியில்
சதா பறந்து பறந்து
பாடித் திரிகிறது
கோதையின் திருப்பாவையை..