இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/-ப.மதியழகன்

உலகில் நீதி தழைக்கட்டும்
குள்ளநரிக்காரர்களின் வேஷம் கலையட்டும்
தமிழ்மொழி உலகை ஆளட்டும்
தமிழர்களுக்கென விலாசம் கிடைக்கட்டும்
வள்ளுவன் சொன்ன அறம் நிலைக்கட்டும்
கம்பனின் புகழ் ஓங்கி உயரட்டும்
தைமுதல்நாளில் தமிழ்இனமும்,
தமிழ்மொழியும் ஏற்றம் பெறட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்