கிராமத்துப் பொங்கல்/——நாகேந்திர பாரதி



ஓலையிலே பத்த வச்சு
ஒடை விறகில் தீப் பிடிக்கும்

மூணு கல்லைக் குத்த வச்சு
முற்றத்திலே புகை மூட்டம்

இஞ்சி மஞ்சள் கழுத்தோட
ஏறுகின்ற பானையிலே

கொஞ்ச நேரம் ஆனதுமே
கொதிச்சுப் பொங்கி வரும்

பொங்கலோ பொங்கல் என்று
பூரித்துக் குலவைச் சத்தம்
—————