இப்போது இல்லை/ சௌவி

அக்கற்களை மலையில் நின்றபடி வெட்டியவன்
இப்போது இல்லை

அக்கற்களை
தலைமேல் சுமந்து கொண்டுவந்து
கொடுத்தவள் இப்போது இல்லை

ஒவ்வொரு கல்லுக்கும்
இன்னொரு கல்லுக்குமிடையே
ஊற்றப்படும் காரையைக்
கலக்கித் தந்தவள்
இப்போது இல்லை

திரைகடல் தாண்டிச்சென்று
திரவியம் சேர்த்து
பார்த்துப் பார்த்துக் கட்டியவன்
இப்போது இல்லை

சுவர்களோடு பேசிக்கொண்டு
சுகமாய் வளரந்தவர்கள்
இப்போது இல்லை

நூற்றி எண்பது வருடங்கள் பழமையான
அந்த வீடு இடிக்கப்படுகிறது

இப்போது இல்லாதவர்கள்
அப்போது இருந்தவர்கள்
அழத்தொடங்குகிறாகள்

-சௌவி

ஒவ்வொரு கல்லாக
வைத்துக் கட்டியவன்
இப்போது இல்லை

அக்கற்களை மலையில் நின்றபடி வெட்டியவன்
இப்போது இல்லை

அக்கற்களை
தலைமேல் சுமந்து கொண்டுவந்து
கொடுத்தவள் இப்போது இல்லை

ஒவ்வொரு கல்லுக்கும்
இன்னொரு கல்லுக்குமிடையே
ஊற்றப்படும் காரையைக்
கலக்கித் தந்தவள்
இப்போது இல்லை

திரைகடல் தாண்டிச்சென்று
திரவியம் சேர்த்து
பார்த்துப் பார்த்துக் கட்டியவன்
இப்போது இல்லை

சுவர்களோடு பேசிக்கொண்டு
சுகமாய் வளரந்தவர்கள்
இப்போது இல்லை

நூற்றி எண்பது வருடங்கள் பழமையான
அந்த வீடு இடிக்கப்படுகிறது

இப்போது இல்லாதவர்கள்
அப்போது இருந்தவர்கள்
அழத்தொடங்குகிறாகள்

-சௌவி