
வாழ்க்கையில் நம்மை
அடையாளம் காட்ட
யாராவது வழிகாட்டியாக
இருப்பார்கள்
உற்றுக் கவனித்தால்
கண்ணில்
தென்பட மாட்டார்கள்
அல்லது யாருமிருக்க
மாட்டார்கள்
பிரமையாகக் கூட இருக்கும்
உண்மையில் வழியுமில்லை
வழிகாட்டியுமில்லை
பொய் தோரணம் கட்டி
யாரோ
நமக்கு இருப்பதுபோல்
தோன்றும்
எனக்கென்று
வழிகாட்டித் தேவையில்லை
யார் எனக்கு எதை
வழிகாட்டப் போகிறார்
எதற்குக் காட்ட வேண்டும்
எல்லாம் பேத்தல் மயம்

உண்மையில் satire நிரம்பிய கவிதை. ஒரு விரக்தி மனநிலையில்
படித்து ரசிக்க வேண்டிய
கவிதை.
உண்மையில் satire நிரம்பிய கவிதை. ஒரு விரக்தி மனநிலையில்
படித்து ரசிக்க வேண்டிய
கவிதை.
உண்மையில் satire நிரம்பிய கவிதை. ஒரு விரக்தி மனநிலைக்கு
அழைத்துச் சென்று ரசிக்க
வைக்கும் கவிதை.
ஜான்னவி.