1797 ம் ஆண்டு(18ம் நூற்றாரீண்றடு) இங்கிலாந்து கவிஞர் சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜ் ஒரு வகையான போதை மருந்தை உண்டு கனவு கண்டதை குறிப்பிட்டு, கனவில் தோன்றிய வரிகளை அப்படியே போதை தெளிந்தபின் எழுதினார். கனவில் நூற்றுக்கணக்கில் வரிகள் தெரிந்ததாகவும் ஆனல் ஃ சொச்சம் வரிகள்தான் நினைவுக்கு வந்ததை பதிவு செய்தார். அந்த கவிதையின் தலைப்பு ” குப்ளே கான்”. மங்கோலிய பேரரசன் குப்ளே கான் எழுப்பிய அரண்மனையை அலாதியாக விவரிக்கும் கவிதை இது. இந்த கவிதையின் பின்புலத்தை அபாரமாக அலசுகிறார் போர்ஹெஸ். இந்த கவிதை எழுதப்பட்டது 1797 ம் ஆண்டு. ஆனால் 1816 ல் தான் பிரசுரமானது. (1834 ல் கொலிரிட்ஜ் காலமானார்).
13 ம் நூற்றாண்டில் (1270 வாக்கில்) குப்ளே கானுக்கு கனவில் ஒரு பிரமாண்டமான மாளிகை தெரிகிறது. கனவில் கண்டமாதிரி அரண்மனையை கட்டுகிறான். அவன் இறந்தபிறகு அந்த அரண்மனை சிதிலமடைகிறது.
போர்ஹெஸ் இரண்டு உண்மை சம்பவங்களையும் அலசுகிறார். கொலிரிட்ஜுக்கு மங்கோலியா அரசனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார். ஏனெனில் மங்கோலியா வரலாறு நூல்கள் அதுவரையில் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. 1836 ம் ஆண்டுதான் முதன் முதலாக ( இந்த கவிதை வெளியாகி 20 வருடங்கள் கழித்து) ரஷீத் அல் தீன் எழுதிய ஆங்கில வரலாறு நூலில் ‘ குப்ளே கான் தன் கனவில் கண்டது போல் அரண்மனையை எழுப்பினான்” என்ற வரியை போர்ஹெஸ் சுட்டிக்காட்டி சிலாகிக்கிறார். முதல் கனவு ஒரு அரண்மனையை எழுப்பியது. இரண்டாவது கனவு அந்த அரணமனையின் கவிதையை எழுதியது. (அரண்மனை சிதிலமடைந்ததால் கவிதையும் 50 வரிகளோடு நின்று போனதா?). குப்ளே கானின் ஆன்மா தான் எழுப்பிய அரண்மனை சிதிலமடைந்ததை பொறுக்கமுடியாமால் கொலிரிட்ஜ் கனவில் நுழைந்து மொழியில் மீண்டும் அரண்மனை கட்டப்பட்டதா? என போர்ஹெஸ் வியப்புடன் எழுதிச்செல்கிறார். இரு கனவுகள். இரு படைப்புகள். ஒன்று மாளிகை. மற்றது கவிதை. விந்தை. விசித்திரம். (கூகுளில் தேடினால் குப்ளேகான் கவிதையை வாசிக்கலாம்). போர்ஹெஸ் ஆகச்சிறந்த மேதை. அவர் வாசிக்காத நூல் இல்லை. இரண்டு சமபவங்களை அவர் விவரிக்கும் அழகே அலாதி. Remarkable Genius!
