
நாற்காலியின் மீது
‘நான்’ ஏறி
அமர்ந்துகொண்டு
ஆட்டம் போடுகிறது.
‘நான்’
தன்னைக்
கடவுளாக
கற்பனை செய்து கொள்கிறது.
காவடி தூக்கும் கூட்டம்
நானின்
அதிகார நெடியில்
மகுடிக்கு மயங்கும் பாம்பென ஆகிறது.
‘நானின்’
வார்த்தைகள்
மந்திர உச்சாடனங்களை ஒத்திருப்பதாகவும் ‘நான’ன்றி
எதுவுமில்லையெனவும் கதையாடிக் கிடக்கிறார்கள்.
‘நான்’
இன்னொரு நானை
விரும்புவதில்லை.
ஊழிக்கால
பெருமாற்றங்களால்
‘நான்’
இடம்பெயரும் நாளில் அடுத்த நானின் வருகைக்காக
காத்துக்கிடக்கிறார்கள் காவடி தூக்கிகள்.
