
கருமேகத்துள் ஒளிந்திருக்கும்
நதி போல
காட்டு மூங்கிலில் மறைந்திருக்கும்
இசை போல
காற்றுக்குள் ஒளிந்திருக்கும் மனித
உயிர் போல
கல்லுக்குள் புதைந்திருக்கும் சாமி
சிலை போல
தீக்குச்சிக்குள் மறைந்து நிற்கும்
ஒளிப் பிழம்பு போல
எங்கு மறைந்திருந்து எமக்குள்
வந்தாய் வீரமாய் !
காக்கட்டும் அது அகிலத்தை
புதிய ஞானமாய்..!!
