ஆசையுடன் அமர்ந்த வண்டி.. /வே.கல்யாணகுமார்

அன்றொருநாள் ஆசையுடன் அமர்ந்த வண்டி..
அகழிக்கரை மண்தரையில் உருண்ட வண்டி..
குரங்குப்பெடல் போட்டுநானும் பறந்த வண்டி..
குட்டிக்கர்ணம் அடித்து முட்டித் தேய்த்தந்த வண்டி..
கூத்துப் பார்க்க இராத்திரியில் மிதித்த வண்டி..
கூடப்படிச்ச நண்பன் டபுல்ஸ அடித்ததந்த வண்டி..
ஆசையோடு கேட்டு அப்பா வாங்கிக் கொடுத்த வண்டி.!
கனவுகளை கவிதைகளை இசைத்த வண்டி..
காலமென்னும் ஓடத்திலே ஏறியதந்த சைக்கில் வண்டி!