நபகோவின் பினின் (Pnin)/எம்.டி.முத்துக்குமாரசாமி

விளாடிமிர் நபகோவின் பினின் நாவலை வாசித்தவர்களை நான் இன்னும் சந்தித்திருக்கவில்லை. லோலிதாவின் ஹும்பர்ஸ் ஹும்பர்ஸிடமிருந்து எவ்வளவு வித்தயாசமானவர் பினின்! தன்னுடைய கதாநாயக பாத்திரங்களுக்கு வி, விக்டர், விளாடிமிர் என்றெல்லாம் பெயர் வைத்து கதாநாயகன்கள் நபகோவின் நீட்சிதானோ என எண்ணவைக்கும் நபகோவ் உண்மையில் பினின் கதாபாத்திரத்தோடுதான் அடையாளம் காணப்பட்டார் என பல விம்ர்சகர்கள் எழுதுகிறார்கள். லோலிதாவின் ஹும்பர்ஸிடம் காணப்படுகிற சுயமோகமும் diabolical intelligence-ம் பினினிடத்தில் சுத்தமாக இல்லை. ஹும்பர்ஸின் கதைசொல்லலை ஒரு வகையான seduction எனலாம்; அது அவனுடைய குற்றச்செயலுக்கு வாசககர்களை சாதக சாட்சிகளாக recruit செய்வது. ஆனால் பினினிடத்தில் அப்பாவித்தன்மையும் வேடிக்கையும் மிளிர்கின்றன. ஒரு புலம்பெயர்ந்த ரஷ்யனாக அமெரிக்காவில் ஆங்கிலத்தோடும் அமெரிக்க வாழ்வோடும் தன்னுடைய புஷ்கினின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் பாரம்பரியத்தோடும் தடுமாறும் கதாபாத்திரம் பினின். பினினுக்கு அமெரிக்கா கைவசமாவதில்லை. ஹும்பர்ஸோ அமெரிக்காவின் உள்ளார்ந்த இதயத்தை உற்று நோக்கி அதன் துடிப்புகளுக்கு ஏற்ப கதை சொன்னவன். பினின் அமெரிக்காவில் கால் தடுக்கி கீழே விழுபவன். இப்படி வேறுபட்ட கதாபாத்திரங்களை உருவாக்க முடிந்ததும் நபகோவின் சாதனை.

‘அகம்’ —- பால் வேலரி/எம்.டி.முத்துக்குமாரசாமி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)