கோமல் சுவாமிநாதன் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு
கருத்தரங்கத்திற்கு வந்திருந்தார்.ஏற்
கெனவே சந்தித்து உரையாடியதுண்
டு. எந்த எழுத்துக்கலைஞர் தஞ்சா
வூருக்கு வந்தாலும் தஞ்சை ப்ரகாஷ்
இலக்கியவட்டம் அவரை தங்கள் விரு
ந்தினராக ஏற்றுக் கொண்டாடுவது
வழக்கம். பல்கலைக்கழகத்திற்குச்
சென்று சந்தித்தோம்.வளாகத்தைச்
சுற்றியவாறே நெடுநேரம் இலக்கிய
விவகாரங்களைக் பேசிக்கொண்டிரு
ந்தோம் அலுப்பின்றி.
கோமல் ஏராளமான பதில்களை வை
த்திருந்தார்.நாங்கள் எங்கள் கேள்வி
களை மறந்து அவரது பதில்களைப்
பிடுங்கிக் கொண்டிருந்தோம்.நல்ல
வாசகனுக்கும் நல்ல எழுத்துக்கலை
னுக்கும் இந்த வித்தை சுலபமானது
தான்.சக எழுத்தாளனை நேசிக்கும்
உயரிய மனோபாவம் ஒவ்வொரு சொ
ல்லிலும் வெளிப்பட்டது.வாழ்க்கை என்பது சிக்கலான விவகாரம்.நல்ல
சேதியும் உண்டு கெட்டசேதியும் உண்
டு.எந்த உத்தியும் தேவையில்லை
என்பது நல்ல சேதி. ஆனால் இதில்
எந்த உத்தியும் இல்லாமல் அடைய
முடியாது என்பது கெட்டசேதி. இடது
சாரி உரையாடல்காரர்களுக்கேயுரிய
வறட்டுத்தனம்,தட்டையான நோக்கு
எவையும் அவரிடம் இருந்ததில்லை.
சி.சு செல்லப்பா முதலான மணிக்
கொடி எழுத்தாளர்களோடு இவர் கொ
ண்டிருந்த நெருக்கம் காரணமாக இது
சாத்தியமாகியிருக்கலாம்.அல்லது
கலை மனசு தன் சுயத்தை எந்த நேர
த்திலும் இழப்பதில்லை என்பதாக
வும் இருக்கலாம்.
தஞ்சாவூரில் ஓர் இலக்கியக் கூட்டம்.
கோமல் சிறப்புரை.முன்னால்பேசிய
நான் சிலவிஷயங்களைக் காட்டமாக
எடுத்தேன்.கல்கி,நா.பா,சாண்டில்யன்
என்று. பின்னால் கோமல் சட்டையை
லேசாகப்பிடித்து இழுத்தார்.விஸ்வநா
தன் கொஞ்சம் மெதுவா என்றமாதிரி
யான பார்வை. எழுந்த சலசலப்பு அட
ங்கியது.தொடக்கம் சுமுகமாக இருந்
தால்தான் கூட்டத்தைச் செம்மையாக
க்கொண்டு போகமுடியும் என்பதான
அறிவித்தல். அது.இளமைச் சவடால்,
எல்லாம் தெரிந்தவன் என்ற எங்களுக்
கேயுரிய கர்வம் அன்றிலிருந்து எங்க
ளிடம் அண்டவில்லை.அப்புறம் கட்சி
நிதிக்காக “ஓர் இந்தியக்கனவு’ நடந்
தது.அதில் வரும் அனாமிகா பாத்திர
ம் நிறைவாக இல்லை என்றதற்கு
‘பெண்கள் எப்போதுமே பெயரில்லா
தவர்கள்தாம் நீ இன்னொரு முறை
நாடகத்தைப்பார் என்றார் சிரித்துக்
கொண்டே.ஒரு நாடக உருவாக்கத்தி
ல் எவ்வளவு வலி,உழைப்பு,பொருள்
செலவு,,கவலை,நிர்வாகம் இருக்கு.
இருந்தாலும் பார்வையாளனுக்கான
கருத்து என்பது முக்கியமானதுதான்.
கலை பார்வையாளனுக்குரியது என்
றது நினைவிலிருக்கிறது.அவருக்கு
எப்போதும் யோசிக்கும் முகம்.
பிரச்சனை மனதில் இருக்கிறதுஎன்று
உணர்ந்து விட்டால் தீர்வும் உண்டு.
அது மனதிற்கு அப்பாலிருக்கிறது.
மனதைக் கடக்க வழிதேடுவதுதான்
முக்கியமானது. மனம் பற்றிய அவரு
டனான உரையாடல் சுவாரசியமாக
இருந்தது.அவரது எல்லா கலைப்ப
டைப்புகளிலும் ஓர் எளிய செவ்வியல்
வடிவம் இருந்தது.சினிமாத் தளம்
வேறு நாடகத்தளம் வேறு என்ற புரி
தல் இருந்தது.சினிமாவைவிட்டு நாட
கங்கள் பக்கம் முழுதாக வந்ததற்குச்
சிலர் சினிமாவில் தோல்வியடைந்த
வர் என்ற விமரிசனமும் வந்தது.சில
உள்ளுணர்வுகளைக் கொண்டுமட்டும்
ஒருவரை எடைபோட முடியாது.சில
வெளி அளவுகோல்களும் தேவைப்
படுகின்றன என்பதுண்டு.ஆனால்
கோமலுக்கு எதில் எப்போது நுழைய
வேண்டும்,எப்போதுவெளிவரவேண்
டும் என்ற விஷயம் தெரிந்திருந்தது.
நாடகம் என்பது மேடை,திரைச்சீலை
கள்,ஒளி விளக்குகள் என்பனமட்டு
மல்ல.மனிதர்கள் நடிப்பு உழைப்பாளி
களாக உடனிருந்தனர். இதில் ஒரு
நுட்பமான கணக்கு இருந்தது.கோமல்
எப்போதும் வானத்தில் கனவுகளோடு
சஞ்சரிக்கும் தேவதூதராக இருந்ததி
ல்லை.எதார்த்தம், நிஜம் என்பதை
நம்பினார்.இந்தக் கணக்கு வாழ்விய
லில் ஒரு நேரான முறை.உலகம் என்
பது தப்பிச்செல்ல அல்ல.இருத்தல்
தான்.கோமல் எழுத்தை,சிதைக்காமல்
நேர்த்தியான வடிவம் கொடுத்தார்.
கே.பாலச்சந்தரின் படங்களில் இருந்த
கோமல் தன் சுயத்தை அப்படியே அனுமதிருந்தார்.நடுத்தரவர்க்கத்து
பலம் -பலவீனங்களை திரையில்
நாகாசுபண்ணி மிகையாகக் காட்டி
ரசிகர்களை இழுத்து தமிழ்சினிமா
முகத்தைச் சற்று விகாரப்படுத்தி
வணிகமாக்கிக்கொண்டிருந்த கே.பி,
கோமலின் கதையை அப்படியே கொ
ண்டுவந்தார் என்பது சுவாரசியம்..
போராளிக்கு எந்த வழிகாட்டியும் தே
வையில்லை என்பதுதான்.அவனுடை
ய சிறப்பு அவனே.
நான் தபால் துறையில் பணிபுரிவதை
அறிந்த கோமல் தன் தந்தையும் போ
ஸ்ட்மாஸ்டராக இருந்தார் என்று ஒரு
குழந்தையைப் போலக் குதூகலப்படு
வார்.ஒரு நடுத்தர வாழ்க்கை ஒரு வச
தியற்ற வாழ்க்கை என்பதெல்லாம்
முழுமையான வாழ்க்கை கிடையாது.
கிளர்ந்தெழும் எழுச்சியான வாழ்க்
கைதான்.அது சாகசமல்ல.”தண்ணீர்
தண்ணீர்” நாடகத்தில் இது வெளிப்
படும்.ஓஹோ என்ற கூவல் அவரிடம்
ஒருபோதுமில்லை.ஆனால் பார்வை
யாளர்களை அபாரமாகச் சென்ற
டையும். த்வனியின் பயன் பாட்டை
நன்கறிந்திருந்த கலைஞருக்கு உரத்
த சப்தம் தேவைப்படவில்லை.இதற்
குத்தோதாக சேவா ஸ்டேஜ் அவருக்கு
அமைந்தது.மக்களிடம் இடையீடின்றி
நேரடியாகப் பேசுவது.
“சுபமங்களா” பெயர்ந்தலைப்பே எங்
களுக்குள் பிடித்தமாயில்லை.ஏதோ
மகளிர் பத்திரிகை.மஞ்சள் மகிமை
கேதாரவிரதம் அஷ்டலட்சுமி தோத்தி
ரம்,கோலம் சமையல் இதழாக வாசக
ர்கள் நினைத்துவிடலாம் என்ற பயம்
அதை உடைத்தெறிந்தார்.பெயரில்
ஒன்றுமில்லை என்று அசல் இலக்கிய
ப்பத்திரிகையாக மாற்றினார்.எழுத்து
சி.சு செல்லப்பா மற்றும் மணிக்கொடி
எழுத்தாளர்களின் தளமாக மாற்றிக்
காட்டினார்.சுபமங்களா சகாப்தம் என்
றே சொல்லவேண்டும்.எழுத்து மணிக்
கொடி விட்டுச் சென்றதிலிருந்து இன்
னும் செறிவான களமாக முன்னெடுத்
தார்.சுபமங்களா நேர்காணல் பிரசித்
தம். தமிழிலக்கியவரலாறு என்ப
தாகவே அவை உருக்கொண்டன.”என்
வீடு என்கணவர் என் குழந்தை”என்ப
தன் பின்னணியில் அவரது எண்ணம்
துல்லியமானது.அரசு ஊழியர்கள்.
வங்கி ஊழியர்கள்,தபால் ஊழியர்கள்
எல்ஐசி ஊழியர்களின் ரிக்ரியேஷன்
கிளப்புகளில் அரங்கேறிய அபத்த
நாடகங்களின் அசட்டுத் சிரிப்புகளில்
லயித்து துணுக்குத்தோரணங்களாய்
ஆக்கி நகைச்சுவை என்ற பெயரில்
சிரித்துப் பழக்கப்பட்ட ரசிகர்களைத்
தம் பக்கம் ஈர்ப்பது எளிதானதல்ல
என்பதை அறிந்தே நாடகங்களை
நம்பிக்கையோடு அரங்கேற்றினார்.
அபாரவெற்றியும் பெற்றார்.கோமல்
என்ற கலைஞனின்மாயவித்தை இது.
ரசிகர்களின் ரசனை முதல்தரமாக
மாறியது.
சகஸ்ரநாமம்,பி.எஸ்.ராமையா, ராஜா
மணி,கலாசாரம் ராஜகோபால் முதலா
ன ஜாம்பவான்களிடமிருந்து கற்றுக்
கொண்ட நாடகக்கலையை அடிநாதம்
கெடாமல் வேறு ரூபத்திற்கு மாற்றி
னார்.சமூகப்பிரச்சனைகளை ரசனை
ரோடு சொல்ல முடிந்தது.சேவா ஸ்டே
ஜ் அனுபவம் “ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்”
குழுவைக் தொடங்கவைத்தது.
சபமங்களா சிறுகதைப்போட்டியில்
தஞ்சை ப்ரகாஷ் “பற்றி எரிந்த தென்
னைமரங்களுக்கு இரண்டாம் பரிசும் என் “யாதுமாகி” க்கு மூன்றாம் பரிசும்
கிடைத்தது.அவரைப்பார்க்க சென்
னை சுபமங்களா அலுவலகம் சென்
றோம்.கவிஞர் இளையபாரதி, வண் ணநிலவன் இருந்தனர்.மேற்கு மாம்
பலம்? அவரது இல்லம் சென்றோம்.
அவர் படுக்கையில் கிடந்தார்.வலி.
எங்களுக்கும் வலித்தது. இவங்க
தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கா நல்ல
காபிகொடு என்று சமையலறையை
நோக்கிமுனகினார்.மெல்லிய குரலி ல் நலம் விசாரித்தார்.தன்மகன்
ஹாங்காங் கில் இருப்பதாகச் சொன்
னார்.கோமலுடனான ஐந்து நிமிட
உரையாடல் மனதைச் சங்கடப்படுத்
தியது.அவ்வளவே.
கோமல் விட்டுச் சென்றது வெற்றிடமா? இல்லை என்பதுதான் என் பதில்.
